Joseph Prince
Joseph Prince

Senaste avsnittet
100 avsnitt
- கர்த்தருடைய விருந்தில் விடுதலையளிக்கும் வல்லமை இருக்கிறது! திருவிருந்து குறித்த உபதேசத்தின் இரண்டாவது பகுதியில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கிடைத்துள்ள மன்னிப்பு மற்றும் சுகத்தை கொண்டாடுவதற்கும், அதே வேளையில் கர்த்தரின் சுகம், ஆரோக்கியம், பலன் மற்றும் முழுமையான நலம் ஆகியவற்றை நடைமுறையில் பெற்றுக்கொள்வதற்கும் திருவிருந்து எப்படி ஒரு வழியாக அமைகிறது என்பதை ஜோசப் பிரின்ஸ் விளக்குகிறார். விசுவாசிகளுக்கு, குறிப்பாக இருளான காலங்களில், எல்லாத் தீமைகளுக்கும் எதிராக இது எப்படி தேவனுடைய பாதுகாப்பாக அமைகிறது என்பதையும் வேதவசனங்களிலிருந்து அறிந்துகொள்ளுங்கள். இன்றே விசுவாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இதில் பங்கேற்கத் தொடங்குங்கள்; நோயிலிருந்தும் அழிவிலிருந்தும் உங்களை விடுவிக்கும் அவருடைய வல்லமையை அனுபவியுங்கள்!
இந்த அத்தியாயம் குறித்து,
ஆகஸ்ட் 7, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் வழங்கிய 'Eat Your Way To Divine Health' (தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்) — பகுதி 2 என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். - இன்றே உங்கள் சரீரத்தில் தேவனுடைய குணமாக்குதலையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் கண்டறியுங்கள்! இந்த ஜீவனுள்ள செய்தியில், ஜோசப் பிரின்ஸ், கர்த்தருடைய இராப்போஜனம் எதைப் பற்றியது என்பதையும், பெருகிவரும் வியாதி மற்றும் நோய்களின் காலத்தில் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதற்கு அது எப்படி தேவனுடைய திறவுகோலாக இருக்கிறது என்பதையும் வேதப்பூர்வமாக விளக்குகிறார். அப்பமும் கிண்ணமும் தனித்தனியான, சக்திவாய்ந்த சத்தியங்களை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றிய துல்லியமான புரிதலைப் பெறுங்கள். மேலும் போஜனத்தின் போது “உங்களை நீங்களே நியாயந்தீர்ப்பது” என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நிலைமை எதுவாக இருந்தாலும், இந்த சக்திவாய்ந்த உடன்படிக்கை உணவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்று, தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ண தொடங்குங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் ஜூலை 31, 2016 அன்று பிரசங்கிக்கப்பட்ட, ‘தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்’ என்ற பிரசங்கத்தைப் பார்க்கிறீர்கள் - உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் — அதாவது உங்க உடலுக்கு ஆரோக்கியம், உறவுகள்ல மகிழ்ச்சி, குடும்பத்துக்கு தேவையானத, தொழில் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், ஊழியத்துக்குத் தேவையான பலத்த — தேவன் கொடுக்குற நிறைவான, வழிந்தோடுற ஆசீர்வாதங்களோட ஒவ்வொரு நாளையும் வாழ்வதா கற்பனை செஞ்சு பாருங்கள். ஜோசப் பிரின்ஸ் வழங்குற இந்த அடிப்பட செய்தியின் மூலம் நீங்க பின்வருவத அறிந்துகொள்வீங்க:
• தேவன் கொடுக்குற வாழ்க்கைய வாழ்வதற்குத் தேவையான ""ஒரே ஒரு முக்கிய விஷயம்"" என்னன்னு இயேசு சொல்வத தெரிஞ்சிக்கோங்க.
• உண்மையான நிறைவையும் திருப்தியையும் பெற்றுக்க, இயேசுவிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் பெற்றுக்க கற்றுக்கொள்ளுங்க.
• பரலோகத்தோட எல்லா வளங்களும் உங்களுக்குக் கிடைக்கிறதைதையும், அது உங்க தேவைங்க அனைத்தையும் விடப் பெரியதுனு உணர்ந்துகொள்ளுங்க.
• நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வதற்கு முன்பாகவே, ஊழியக்கார ராஜாவான இயேசு உங்களுக்கு எப்படி ஊழியம் செய்ய விரும்புகிறார் னு வெளிப்பாடா பெற்றுக்கோங்க.
அன்பானவர்களே, ஏதாவது ஒரு சவாலோ இல்லனா சூழ்நிலையோ உங்கள சோர்ந்துபோகச் செய்வதா உணர்ந்தா, இந்தச் செய்திய கேளுங்கள்; கர்த்தரோட அன்பினாலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களினாலும் நிறைந்து வழிந்தோட பெற்றுக்கோங்க!
இந்த நிகழ்ச்சி பற்றி
ஆகஸ்ட் 4, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பேசிய ""உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை!"" (The Overflow Life For You!) என்ற பிரசங்கத்த நீங்க பார்த்துக்கொண்டிருக்கிங்க. - உலக மக்கள் நம்மிடமிருந்து உயர்ந்த ஒழுக்க நெறிகள எதிர்பார்க்கறாங்க — அவங்க அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தான்! கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவ போன்றதொரு வாழ்க்கைய வாழ அழைக்கப்பட்டிருக்கோம். ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த நடைமுறைக்கு ஏற்ற மற்றும் வல்லமைமிக்க செய்தியின் மூலம், கிறிஸ்துவுக்குள் உங்க உண்மையான அடையாளத்த அறிந்துகொள்வதே சிறந்த ஒழுக்க நெறிகளுடன் வாழ்வதற்கான திறவுகோல் என்பத அறிந்துகொள்ளுங்க. பின்வருவதன் மூலம், தேவனுடைய மகிமைய வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக நீங்கள் இயல்பாவே மாற முடியும்:
• இயேசு எப்படி இருக்கிறாரோ, அப்படியே நீங்களும் இருக்கிங்க என்ற வாழ்க்கைய மாற்றும் வெளிப்பாட்ட பெற்றுக்கொள்ளுங்க.
• கிறிஸ்துவுக்குள் ""ராஜாவாகவும் ஆசாரியராகவும்"" (king-priest) உங்க அடையாளத்த புரிந்துகொள்ளுங்க.
• இயேசுவின் பரிபூரணத்த — அவருடைய ராஜத்தன்மை, பணிவிடை செய்யும் குணம், தாழ்மை மற்றும் கிருபைய நோக்கிப் பார்த்து, அவருடைய சாயலா மாறுங்க.
• உங்க அன்றாட காரியங்கள்ல பரிசுத்த ஆவியானவர் உங்கள வழிநடத்த இடம் கொடுங்க.
கிறிஸ்துவுக்குள் நீங்க உண்மையில் யார் என்பத உணர்ந்து, தேவன் உங்கள வாழ அழைத்த அந்த வெற்றிசிறந்த, மகிமையான வாழ்க்கைய வாழுங்க!
இந்த நிகழ்ச்சி பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜூலை 28, 2019 அன்று பேசிய "உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிங்க. - "தேவன் உங்களை நேசிக்கிறார்."
துரிதமாக வாசிக்க வேண்டாம் - உங்களுடைய ஊடுருவலுக்கான தேவனுடைய வல்லமையை பெற்றுகொள்ளும்விதமான சகல வித்தியாசங்களையும் அந்த மூன்று வார்த்தைகள் ஏற்படுத்திடும் என்று விசுவாசியுங்கள். அது ஒருவேளை சுகமளித்தலுக்கான தொடுதலாக இருந்தாலும், தேவைகள் அல்லது வாழ்வின் சவால்களுக்கான ஞானமாக இருந்தாலும், தேவனுடைய அசைவில்லாத அன்பை பார்ப்பது உங்களுக்கு தேவையான அற்புதங்களின் வாசலை எப்படி திறக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த பிரசங்கத்தில், ஜோசப் பிரின்ஸ் தேவனுடைய ஆழமான அன்பை கண்டு அதை சார்ந்துகொள்ளுதல் பின்வரும்பவற்றை அளித்திடும் என்று வசனங்களில் இருந்து வெளிப்படுத்தி சொல்லுகிறார்:
• உங்கள் வாழ்வில் இருந்து பயத்தை விலக்கிவிடும்.
•தேவன் உங்களுக்கு அருளின வாரங்களில் தீவிரமாய் செயல்படுதல்.
• உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சுகத்தை, மீட்டுக்கொள்ளுதலை, தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
• தேவையுள்ள பகுதிகளில் அவருடைய அளவற்ற நிறைவு பொங்கி வருவதைப் பாருங்கள்.
பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்வில் பரலோக வளங்களை அவர் பொழிந்திட விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதை காணும்போது தேவனுடைய வல்லமை பலமாய் பெருக்கெடுத்து பாய்வதை பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இருங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, அவருடைய அன்பை கண்டு அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள் என ஜூலை 21, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.
Om Joseph Prince
, . 5 . , . GospelPartner.com , . . . .
Podcast-webbplatsJoseph Prince: Poddsändningar i Familj


